Header Ads



இத்தாலியிலிருந்து டுபாய் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 64 புறாக்கள்


இத்தாலியிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 3,431,400 ரூபாய் பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, 2  நபர்கள் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இத்தாலியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் புறாக்கள், டுபாய் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட 64 புறாக்களில் 8 புறாக்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


சிறிய இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களின் 8 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இவை கடத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.