Header Ads



கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து, நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்யும் நிலை


கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர்  சாடியுள்ளார்.


எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை பௌத்த சாசனம் தொடர்பான உள்நாட்டு மற்றும் மத ரீதியான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து தமக்குத் தெளிவான புரிதலும் முதிர்ச்சியும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


 சில கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பௌத்த மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் மதக் கட்டமைப்பைச் சீரமைக்கத் தமக்குத் தேவையான ஒழுங்குமுறை மற்றும் சுயக் கட்டுப்பாடு ஏற்கனவே பௌத்த சாசனத்திற்குள் இருப்பதாகவும் இந்தப் பேச்சின் மூலம் ஞானசார தேரர் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.