தியாகத்திருநாளில் முடிவுக்கு வந்த, 20 வருட சிறை வாழ்க்கை.
சவூதி அரேபியாவுக்கு இருபது வருடங்கள் முன்பு வேலைக்கு சென்ற கோழிக்கோடு சேர்ந்த அப்துல் ரஹீம்.
ஒரு வாகன விபத்தில் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
ஒரே மகன் மரணத்தை எதிர்பார்த்து சிறைக் கம்பிகளின் பின்னால் நாட்கள் கடத்துவதை எண்ணி கண்ணீர் வடித்த ஏழைத்தாயின் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த மலையாள சமூகமும் கவலை கொண்டது.
சவுதி அரேபியாவில் உள்ள பல்வேறு மலையாள அமைப்புக்கள் இணைந்து அப்துல் ரஹீம் வழக்கில் சட்ட உதவி வழங்க முன்வந்தனர்.
அப்துல் ரஹீம் ஓட்டிய வாகன விபத்தில் மரணமடைந்த நபரின் குடும்பத்தை சந்தித்து பல கட்டமாக தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை பலன் கண்டது.
36கோடி ரூபாய் நஷ்டஈடு தந்தால், அப்துல் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்க தயார் என்று அந்த குடும்பம் கூறியது.
36கோடி ரூபாய் எனும் பெரிய தொகை, ஆனாலும் நம்பிக்கையுடன் மலையாளி சமூகத்தின் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.
செம்மனூர் ஜுவல்லரி அதிபர் போபி செம்மனூர் ஒரு கோடி ரூபாய் வழங்கியதோடு கேரளம் முழுவதும் வீதி வீதியாக மக்களை சந்தித்து பரப்புரை செய்து நிதி சேகரித்தார்..
அப்துல் ரஹீம் மரண தண்டனையில் இருந்து விடுவிக்க ஜாதி மதம் கடந்து மலையாளிகள் வாரி வழங்கிட ஒரே வாரத்தில் 36கோடி ரூபாய் எனும் இமாலய இலக்கு பூர்த்தியானது.
இது அத்தனையும் நடந்தது ஏகதேசம் ஒரு வருடம் முன்பு. நஷ்டஈடு தொகை இந்திய அரசு உதவியுடன் சவூதி அரேபியா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டும் வழக்கு தாமதமானது..
சவூதி அரேபியா நீதிமன்றம் ஆறு மாதங்கள் முன்பு மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது..
ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டி வந்ததால் அப்துல் ரஹீம் விடுதலை தாமதமானது.
எல்லாவகையான நீதிமன்ற நடைமுறை பூர்த்தியாகி இரண்டு தினங்கள் முன்பு அப்துல் ரஹீம் விடுதலையாகி தாய்நாடு செல்லலாம் என்று சவூதி அரேபியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கொண்டு தாமதிக்காமல் இயங்கிய அப்துல் ரஹீம் வழக்கை நடத்தி வந்த மலையாளி கூட்டமைப்பு துரிதமாக செயல்பட்டு சிறையிலிருந்து விடுதலையானவரை உடனடியாக கேரளம் திரும்புவதற்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து இன்று காலை கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அல்ஹம்துலில்லாஹ்...
நீண்ட 20வருடங்கள் தனது ஒரே மகன் விடுதலையாகி வந்து தன்னை சந்திப்பான் எனும் நம்பிக்கையுடன் தொழுகையிலும் துஆவிலும் நாட்களை கழித்து வந்த தாயின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்த நாள்.
Colachel Azheem

Post a Comment