Header Ads



பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? ஹிஸ்புல்லாஹ் Mp


மினா கூடாரங்களில் இலங்கை ஹாஜிகள் அசௌகரியம்களை எதிர்நோக்குகின்றனர். பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் Mp.


மினா பகுதியில் ஹாஜிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடாரங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், வயோதிபர்கள், பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்ட பலர் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளனர். போதியளவு மலசலகூட வசதிகள் இல்லாமையால், ஹாஜிகள் பல மணிநேரங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலை வேதனையளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனவே, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஹாஜிகள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, இனிவரும் காலங்களில் இத்தகைய நிர்வாக அலட்சியங்களும் அசௌகரியங்களும் மீண்டும் ஏற்படாத வகையில் திட்டமிட்ட மற்றும் பொறுப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.