சுரேஷ் சலேக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது..?
சுரேஷ் சலே போன்றவர்களைக் கொண்டு 270க்கும் மேற்பட்ட அப்பாவி கத்தோலிக்கப் பக்தர்களைக் கொன்று, மேலும் 500க்கும் அதிகமானோரை அங்கவீனமடைய செய்ய அவருக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது? இதன் பின்னணியில் ஒரு பாரிய அரசியல் கரம் இருந்தது.
பிணங்களின் மீது ஏறி நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அந்தப் பேராசைதான் இதன் பின்னணியில் இருந்தது. அப்படிப்பட்ட கொடூரங்களைச் செய்த 'கனவான்கள்' தான் இன்று சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் பதிவுகளை இட்டு, 'பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று விசாரணை நடத்துவதன் தேவை என்ன?' என்று நம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வளவு பொதுப்பணம் செலவானாலும் சரி, எவ்வித தயக்கமுமின்றி அதனைச் செலவு செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்
பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க

Post a Comment