Header Ads



பல்டி அடிப்பதற்கு தடை - சட்டம் வருகிறது


மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


இன்று (26) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


தற்போது அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற போதிலும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு உறுப்பினரையும் ஆளுங்கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தேவையும் அல்லது ஆயத்தமும் இல்லை என அமைச்சர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.