Header Ads



இலங்கை மாணவன் மரணம் - ஜப்பான் பொலிஸார் மீது குற்றச்சாட்டு


ஜப்பானின் Tsuchiura  பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இலங்கை மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மே 19ஆம் திகதி உயிரிழந்த இலங்கை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அவரது தங்கை செய்த முறைப்பாட்டினை ஜப்பனிய பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.


ஜப்பானில் வசித்து வரும் உயிரிழந்த மாணவனின் தங்கையான சத்யானி ஷாக்யா என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். பெப்ரவரி 22ஆம் திகதி, விசக்ஷன தனது நண்பர்கள் சிலருடன் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அங்கு பொருட்களைத் திருடியதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. ஜப்பனிய பொலிஸ் தடுப்புக்காவலில் பல வாரங்களாக வைக்கப்பட்டிருந்ததால் அந்த இளைஞரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.


தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கை செய்த முறைப்பாட்டினையும் தற்போது ஜப்பானிய பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.