மாகாணத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை, காரணம் என்ன தெரியுமா..?
நடப்பாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என JVP யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைகளைச் சமாளிப்பதற்காக அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக 500 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே, இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போனதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Post a Comment