தம்பதியினரை கொலை செய்தவன் பிடிபட்டான்
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி முதியவர் தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தார். மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு, அண்மையில் கடையை மூடிவிட்டு அங்கேயே வசித்து வந்த 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே இந்தக் கொடூரக் கொலைக்கு பலியாகியுள்ளனர்.
கொலைகாரன் தம்பதியினரிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- சதீஸ்குமார் -

Post a Comment