ஜப்பானில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு
ஜப்பானின் Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார்.
தடுப்புக் காவல் மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி, தூங்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞன், குறட்டை விடுவதை நிறுத்தியதை கவனித்துள்ளார்.
அந்த இளைஞர் எவ்வித அசைவுமின்றியும், சுவாசம் இல்லாமலும் இருப்பதைக் பொலிஸ் அதிகாரி, அவரது சுவாசப்பாதையைச் சீரமைக்க முயற்சித்த பின்னர், பொலிஸ் அதிகாரி உடனடியாக அம்பிலன்ஸை அழைத்துள்ளார். அந்த இளைஞன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற பிரேத பரிசோதனை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டோம் என்று நம்புகிறோம் என அவசர மருத்துவச் சூழலை கையாண்ட விதம் குறித்து Tsuchiura பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment