டுபாய் மீது ஈரான் நடத்திய தாக்குதலை, வீடியோ பதிவுசெய்து பரப்பியவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (22) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சிலர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ஈரான் - டுபாய் மீது நடத்திய தாக்குதலைக் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக ஊடகங்களில் பரப்பியமையாகும்.
இதன்படி, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் கடவுச்சீட்டை மட்டும் வழங்கி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அததெரண

Post a Comment