வெலிகமவில் துருக்கி நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு
வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று (3) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 2 சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குறித்த சுற்றுலா வழிகாட்டிகள், அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து 114,000 ரூபா பணத்தையும்; திருடியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment