Header Ads



என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் சவால் விடுங்கள், நோயாளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்


என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் எனக்குச் சவால் விடுங்கள். அதற்குச் சிறந்த வழி நோயாளிகளின் உயிர்களை இதில் சிக்கவைக்காமல் அவர்களை இதிலிருந்து விடுவிப்பதாகும்  என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்ற ஒன்று என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


எனவே, இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், நோயாளிகளின் உயிரைப் பிணைக் கைதிகளாக்காமல், நீதிமன்றத்தின் ஊடாகப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.