விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து பொலிஸார் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் அல்லது விசேட தள்ளுபடி விலைகளில் விமானப்பயணச் சீட்டுக்களை வழங்குவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் இவ்வாறான போலி விளம்பரங்கள் பரப்பப்பட்டுள்ளது.
அதன்படி, உறுதிப்படுத்தப்படாத, சந்தேகத்திற்குரிய இணையத்தள இணைப்புகளை அழுத்துவதைத் தவிர்க்கவும். இவ்வாறான தளங்கள் உங்களது இரகசியத் தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம்.
ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்பட்டால், அவற்றை அந்தந்த விமான நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகச் சரிபார்க்கவும். பயணச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர், அவை பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Post a Comment