இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய, ஒரேயொரு இலங்கையரின் துயரமான முடிவு
இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா? இது ஒரு கொலையா? என்பது தொடர்பாக இத்தாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஷெஹான் பெர்னாண்டோ இத்தாலி பொலிஸ் அதிகாரிகளிடையேயும், அந்நாட்டு மக்களிடையேயும் மிகுந்த மதிப்பையும் கௌரவத்தையும் பெற்ற ஒரு அதிகாரியாவார்.

Post a Comment