Header Ads



எரிபொருட்களின் விலையை ஏன் உயர்த்தினீர்கள்..?


எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக  நாமல் ராஜபக்ச Mp தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விலையை உயர்த்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தெளிவற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.


விலை உயர்த்தப்பட்டு 24 முதல் 48 மணிநேரத்திற்குள் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கின்றது.  ஏன் இவ்வளவு அவசரமாக விலையை உயர்த்த வேண்டும். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது இந்தச் சுமை அரசாங்கம் சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.