இலங்கையில் பாகிஸ்தான் - இந்தியா மோதல் உறுதியானது
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாவுடன் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொலைபேசியில் உரையாடினார். இலங்கை ஜனாதிபதி, இந்தச் சிக்கலுக்கு சுமுகத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்தார். கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைப் பாதுகாக்கவும், அதன் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்புடன், "மென் இன் கிரீன்" (Men in Green) என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணிக்கும் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த விளையாட்டு உணர்வுடனும், தேசப் பெருமையுடனும் களமிறங்கி உலக அரங்கில் வெற்றி பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Post a Comment