மே, ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள்
எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார்.
அரசாங்கம் தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை 70 ரூபாவாக மாற்றியுள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் தபால் சேவையைப் பயன்படுத்துவோர் குறைந்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் பாரம்பரிய தபால் முறையை மேலும் முடக்கும் செயலாக அமையும்.
அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிராக சகல துறைகளிலிருந்தும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தயாராகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் இன்றிலிருந்தே தயாராகி வருகிறது என்றார்.

Post a Comment