Header Ads



வெளிநாடு சென்ற தாயை பழிவாங்க மகளுக்கு தந்தை செய்த அக்கிரமம்


கொழும்பின்  ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை தாக்கியபோது மகள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


தாக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததாகவும், அங்கு தாய் செய்த செயலுக்காக பழிவாங்கும் விதமாக மகளை கொடூரமாக தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தாக்கப்பட்ட சிறுமிக்கு 5 நாட்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 34 வயது சந்தேக நபரின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.