Header Ads



தந்தை தடை விதித்ததால், விபரீத முடிவை எடுத்த 3 குழந்தைகள்


தங்களது விருப்பமான பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமிகள், விபரீத முடிவு ஒன்றை எடுத்து, ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவர்களின் தந்தை, குழந்தைகளின் நலன் கருதி கைப்பேசியைப் பிடுங்கி வைத்தது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு செய்தது பாவமா? என்று அவர் உருக்கமாகக் கேட்டது பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.


இணையப் பயன்பாடு தற்காலச் சிறுவர்களிடம் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு அந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.