புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவை , இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ரணில் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment