ஓய்வூதியம் தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என வதந்தி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது.
இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Post a Comment