Header Ads



ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபா பண மோசடி


ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். 


இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தொடர்பாக CID க்கு 400க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 


விசாரணைகளின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த நபர்களிடமிருந்து குறித்த முகவர் நிலையம் 850,000 ரூபா முதல் 1,850,000 ரூபா வரையான தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.