போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நிதி - எமிரேட்ஸைப் புறக்கணிக்க கோரிக்கை
🔴 சூடானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நிதியளிப்பதாக UAE மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமூக ஊடக தளங்களில் எமிரேட்ஸுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
"பிராந்திய மோதல்களைத் தூண்டுவதில் நேரடி ஈடுபாடு மற்றும் அல் ஃபாஷரில் (சூடானில்) நடந்து வரும் இனப்படுகொலைப் போருக்கு நிதியளிப்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் UAE மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றை UAE பொறுப்பேற்க வேண்டும். எமிரேட்ஸைப் புறக்கணிக்கவும் என்ற லேபிள்கள் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment