Header Ads



"கொடூரமான, பேய்த்தனமான" கொலை சம்பவத்தால் 2 குடும்பங்கள் தவிக்கும் நிலை


கடந்த ஆண்டு ஒட்டாவாவில் இலங்கையர்களான 4 சிறுவர்கள், அவர்களின் தாயார் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தை கனேடிய ஊடகம் ஒன்று நினைவு கூர்ந்துள்ளது. 


"கொடூரமான, பேய்த்தனமான" இந்த கொலை சம்பவத்தால் இரண்டு குடும்பங்கள் தவிக்கும் நிலையை அந்த ஊடகம் விபரித்துள்ளது. 


இந்தநிலையில் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் தெளிவான படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 


2024 மார்ச் 6 ஆம் திகதியன்று அன்று இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. 


கிட்டத்தட்ட சம்பவத்தின்போது ஒரு முழு குடும்பமும் படுகொலை செய்யப்பட்டது இது நகரம், நாடு மற்றும் அதற்கு அப்பால் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது. 


இதேவேளை, இந்த 6 கொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 20 வயதாக இலங்கையர் கடந்த வாரம் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.