Header Ads



நாமல் கேட்கும் ஒரு பில்லியனும், பிரதியமைச்சர் கோரும் 2 பில்லியனும்


பிரதியமைச்சர் சுனில் வட்டகல,  நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.


நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரிய, செப்டம்பர் 10, 2025 திகதிய முந்தைய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி முதல் இழப்பீடு கோரி முதலாவதாக நாமலினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


இதற்கு பதிலளித்த சுனில் வட்டகலவின் சட்ட ஆலோசகர், தனது கட்சிக்காரர் எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும், நாமல் ராஜபக்ச ஒரு நற்பெயர் பெற்ற நபர் அல்ல என்றும், கிரிஷ் பரிவர்த்தனையில் ரூ. 70 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் ஏற்கனவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, எந்தவொரு அறிக்கையும் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்காது எனக் கூறி நாமலின் இழப்பீடு கோரிய கடிதத்தை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.