கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதல்
தம்புள்ளை - பகமுன பிரதான வீதியில் உள்ள ரிதியெல்ல சரணாலயப் பகுதியில், இன்று (26) கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில், லொறி கவிழ்ந்து, ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது ஏராளமான கோழிகள் இறந்துள்ளதாகவும், காட்டு யானை காட்டுக்குள் தப்பிச் சென்றதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், 1,100க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்ததாகவும், லொறியில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment