Header Ads



அமெரிக்க விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி, ஜப்பானுக்கான விஜயத்தைத் ஆரம்பித்தார்.


அமெரிக்க விஜயத்தை  நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தைத்  ஆரம்பித்தார்.


ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து    25 ஆம் திகதி இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப்  பயணமானார்.


ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 ஆம்  திகதி வரை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொள்கிறார்.

No comments

Powered by Blogger.