பிரான்ஸின் ஒரு பகுதியை, பலஸ்தீனியர்களுக்கு வழங்கவும் - இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர்
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை ஊக்குவிப்பதற்காக சர்வதேச மாநாட்டை நடத்தவிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
'பிரான்ஸ் உண்மையில் பாலஸ்தீன அரசைக் காண உறுதியாக இருந்தால் அவர்களுக்கு எனக்கு ஒரு யோசனை இருக்கிறது: பிரான்ஸின் ஒரு பகுதியை செதுக்கி பலஸ்தீனியர்களுக்கு வழங்குங்கள் என்று ஹக்கபி பாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.
பிரான்சும் சவுதி அரேபியாவும் இந்த மாத இறுதியில் பலஸ்தீன ஆதரவு மாநாட்டை நடத்த உள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment