Header Ads



அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைக்க மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது

 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று மக்களை மறந்து, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்காக மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. விமர்சித்துள்ளார்.


கொழும்பில் நேற்று(21) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 


காலியில் பொதுஜன பெரமுனவும், நுவரெலியாவில் தொண்டமானும், அநுராதபுரம் மற்றும் குருணாகலில் ரிஷாத் பதியுதீனுடைய கட்சி உறுப்பினர்களும் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தைப் பெறுவதற்காக அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.


அது மாத்திரமின்றி மட்டக்களப்பில் பிள்ளையானுடைய ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.


கொழும்பு மாநகரசபையில் திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். அரசாங்கத்தின் டீல் அரசியல் மற்றும் அரசாங்கத்துக்கு பக்க சார்பாக நடந்து கொண்ட மேல் மாகாண ஆணையாளரால் மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.


இதற்கு முன்னர் இரகசிய வாக்கெடுப்புக்களை முற்றாக நிராகரித்த ஜே.வி.பி. இன்று மோசடிக்காக அதனை ஊக்குவிக்கின்றது. அதிகாரத்துக்காக தமது கொள்கைகளையே இவர்கள் காட்டிக் கொடுத்துள்ளனர்.


அந்த வகையில் அரசாங்கம் இன்று மக்களை மறந்து, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்காக மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

No comments

Powered by Blogger.