இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரச செயற்பாடு
ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும், இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளார். இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment