எரிபொருள் வாகன விபத்து, எடுத்துச் சென்ற மக்கள்
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் எரிபொருள் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வியாழக்கிழமை(26) அதிகாலை விபத்ததுக்குள்ளாகியது.
முத்துராஜவெலவில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Post a Comment