தேசிய, மத, சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் - ஜனாதிபதி
தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன். அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மல்வத்து - அஸ்கிரி உபய மகா விகாரையின் அனுநாயக்க தேரர் உட்பட நிர்வாக சபை நாயக்க தேரர்களுடன் இன்று (17) பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment