Header Ads



இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி


இலங்கையின் இலவச கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.


விசேடமாக வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளுக்கு உதவும் வகையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.


முக்கிய கல்வி சீர்திருத்தங்கள், கற்பித்தல் தரம், மாணவர் நல்வாழ்வு மற்றும் பாடசாலை வசதிகளை மேம்படுத்த இந்த நிதி உதவும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.


அத்துடன், இந்த நிதியுதவி நாடு முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் பயிற்சியை நவீனமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் கற்றலை ஊக்குவித்தல், சுத்தமான நீர், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட பாடசாலை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை விரிவுபடுத்துதல் என்பவற்றை இலக்காக கொண்டும் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.


இலங்கையின் கல்வி அமைச்சு மற்றும் மாகாண அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.