அவ்வாறு அவர் தொழும் காட்சிதான், இந்தப் புகைப்படம்
கஅபாவின் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு மாதமும் சிறந்த பணியாளரை தேர்வு செய்து அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு வெகுமதி வழங்குவது நிர்வாக வழக்கம்.
அவ்வாறு ஒருமுறை பாகிஸ்தானைச் சார்ந்த ஓருவர் சிறந்த பணியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நிர்வாகம் அவருக்கு ஒரு வெகுமதியை வழங்க முன்வந்தது. ஆனால் அதை அவர் ஏற்க மறுத்தார்.
பகரமாக இவ்வாறு வேண்டுகோள் வைத்தார்:
"கஅபாவின் ஹிஜ்ர் இஸ்மாயில் பகுதியில் தான் மட்டும் தனித்து இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு அனுமதிக்க வேண்டும்''.
அவரது வேண்டுகோளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அவ்வாறு அவர் தொழும் காட்சிதான் இந்தப் புகைப்படம்.
இது ஒரு அற்புதமான காட்சி!
தினம் தினம் நாமும் ஆசைப்படுகிறோம். சிலபோது எதெற்கெல்லாமோ
ஆசைப்படுகிறோம்.
ஆனால் இவருடைய ஆசை எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள்.
- Nooh Mahlari -
www.jaffnamuslim.com

Post a Comment