Header Ads



குழப்பம் விளைவித்த சுமண ரதன தேரர் கைது


மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


உஹன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.