Header Ads



உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்


72 ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 


போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation " பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர முன்வைத்த சமர்ப்பணம், உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது


குணசேகரா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சியதா மிஸ் இலங்கை என்ற தேசிய பட்டத்தைப் பெற்றார். 


அனுராதபுரத்தில் பிறந்த 25 வயதான இவர் களனி பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார்.


மேலும் இந்த போட்டி இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.