பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை மும்முரம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை நாட்டில் இல்லாது செய்வதே தமது அரசியல் ரீதியான கொள்கையாக ஆரம்ப காலத்தில் இருந்து காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் இந்தவிடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துவதுடன், நீதி அமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில், ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு ஏற்கனவே குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டங்களை வகுப்பதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக் காட்டியுள்ளார்.

Post a Comment