அவர்கள் ஷஹீத்கள், அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்..
நினைத்தாலே நெஞ்சம் கனக்கின்றது..!
இந்தச் சிறுவனின் பெயர் ஆதம்.
ஒன்பது பிள்ளைகளைப் பறி கொடுத்த வீரத் தாய் ஆலா நஜ்ஜார் அவர்களின் ஒரே மகனார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தக் கொடுமை நிகழ்ந்த சமயத்தில் அந்த வீரத் தாய் ஆலா நஜ்ஜார் மருத்துவமனையில் நோயாளிகளின் மத்தியில் பணியில் இருந்தார்.
தகவல் வந்ததும் ஓடோடி வந்தார்.
வீடு இருந்த இடத்தில் மண் மேட்டைத்தான் கண்டார். துடிதுடித்தார். பதறினார். பரபரக்கத் தேடத் தொடங்கினார். 12 வயதிலிருந்து ஆறு மாதங்கள் வரை வயதுள்ள இதயத்துண்டுகளைத் தேடத் தொடங்கினார்.
மக்களும் சேகரிக்கத் தொடங்கியிருந்தார்கள். எல்லோராலும் ஏழு குழந்தைகளை மட்டுமே ஒன்று சேர்க்க முடிந்தது. இரண்டு குழந்தைகள்...!?
அப்போது இடிபாடுகள் மத்தியில் அடிபட்டு கிடந்தவர்தாம் ஆதமும் கணவரும். இரண்டு பேரும் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
டிவிகாரர் வந்தார். டாக்டர் ஆலா நஜ்ஜார், உங்களின் ஒன்பது பிள்ளைகளும் ஒரே நேரத்தில் இறந்துவிட்டார்களே... எனச் சொல்லி முடிப்பதற்குள்-
டாக்டர் ஆலா இடைமறித்தார். ‘அப்படிச் சொல்லாதீர்கள். அவர்கள் ஷஹீத்கள். அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்’.
வீரஞ்செறிந்த மண்ணிலிருந்து வருகின்ற செய்திகள் அனைத்தும் இப்படித்தான் இதயத்தையே சம்மட்டியால் அடிப்பதைப் போன்று வேதனை தருவதாய் இருக்கின்றன.
நினைத்தாலே நெஞ்சம் கனக்கின்றது..!
என்று வரை நீடிக்கும் இந்தக் கொடூரம்?
தகவல்: அபுல் அஃலா சுப்ஹானி
post - Azeez Luthfullah
Post a Comment