Header Ads



விடை பெறுகிறார் எஞ்சலோ மெத்திவ்ஸ்


இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

 

தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அதில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். 


ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.