ஷைத்தானுக்கு எறியப்படும் கற்கள், 3 டாலருக்கு விற்பனை என்பது உண்மையல்ல
புனித ஹஜ் கடமையின் பொழுது மூன்று ஜம்ராத்களிலும் ஷைத்தானுக்கு எறியப்படும் சிறிய கற்கள் பொதி செய்யப்பட்டு மூன்று டாலருக்கு விற்கப்படுவதாக வெளிவந்த தகவல்கள் உண்மை இல்லை என்பதனை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு சில தொண்டர் அமைப்புகள் இலவசமாக அவ்வாறான பொதிகளை விநியோகித்ததாக சவூதி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த படம் ஒன்று அதற்காக உபயோகிக்கப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அண்மையில் வளைகுடா நாடுகளுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஸவூதி முடிக்குரிய இளவரசர் உட்பட வளைகுடா கத்தார் அமீரக ஆட்சியாளர்கள் சுமார் 3600 பில்லியன் டாலர் பெறுமதியான முதலீடுகளை மற்றும் பரிசுகளை வழங்கியதை தொடர்ந்து இவ்வாறான புனையப்பட்ட வதந்திகளும் பரவலாக வெளியிடப்பட்டு வருகிறது.
இம்முறை புனித ஹஜ் மேற்கொள்ளும் சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்களதும் ஹஜ் கிரியைகளையும் துஆ பிரார்தனைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அகில மாந்தர் அனைவருக்கும் அருள் புரிவானாக.
பலஸ்தீன் காஸாவிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் கொடூர அடக்கு முறைகளுக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும் ஆளாகும் மக்களுக்கு விடுதலை விமோசனத்தையும் அவ்வல்ல நாயன் விரைவில் தருவானாக!
உலகெங்கும் அடாத்தாக அக்கிரமம் அராஜகம் புரியும் ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்கள் அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை போகும் நயவஞ்சகர்கள், பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் அனைவர் மீதும் அவனது அத்தாட்சிகளை நிரூபணம் செய்வானாக!
Inamullah Masihudeen
Post a Comment