Header Ads



பளு தூக்கும் வீராங்கனைக்கு ஏற்பட்ட துயரம்


பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.


இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவராவர்.


அவர் நேற்று முன்தினம் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர் தலைக்குமேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது.


அதிக எடையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்த நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. அழைத்துச் சென்றனர்

No comments

Powered by Blogger.