Header Ads



“முஸ்லிம் அகதிகள் பிரச்சினையில், மர்ஹும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்”


இலங்­கையின் கடந்த நான்கு சகாப்த இனப்­பி­ரச்­சினை வர­லாற்றில் வட­மா­காண முஸ்­லிம்­களின் பல­வந்­த­மான வெளி­யேற்­றமும், அதைத் தொடர்ந்து ஏற்­பட்ட நீண்­ட­கால அகதி வாழ்வும் மிக முக்­கி­ய­மான ஒரு விட­ய­மாகும். வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட அக­திகள் குடும்பம் ஒன்றை சேர்ந்த ஒரு­வ­ராவும், அக­தி­களின் மறு மலர்ச்­சிக்­காக தனது. கல்விப் புல­மை­யூ­டாக பாரிய பங்­காற்­றி­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் பேரா­சி­ரியர், மர்ஹும் எஸ். எச். ஹஸ்­புல்லாஹ் அவர்கள் கரு­தப்­ப­டு­கின்­றார்கள்.


பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் அவர்கள் எம்மை விட்டும் பிரிந்து (25 ஆகஸ்ட் 2018) ஐந்து ஆண்­டுகள் கடந்­தோ­டி­விட்­டன. (இன்­னா­லில்­லாஹி வ இன்­னா­இ­லைஹி ராஜிஊன்.-)


இந்­நூற்­றாண்டில் இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல், பொரு­ளா­தார மீள் கட்­ட­மைப்­புக்­கான மூலோ­பா­யங்­களை வகுப்­ப­திலும், குறிப்­பாக முப்­பது வருட உள்­நாட்டு போரினால் மிகவும் பாதிக்­கப்­பட்டு இலங்­கையின் நாலா புறங்­க­ளிலும் இடம் பெயர்ந்து சித­றி­யி­ருந்த வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள் எழுச்­சிக்கும் அவர்­களின் மீள் வாழ்­வியல் கட்­ட­மைப்­புக்கும் தனது துறை­யு­ட­னான அறி­வியல், ஆத்­மார்த்த பங்­க­ளிப்­பு­களை வழங்­கி­ய­வர்­களில் பேரா­சி­ரியர் ஹஸ்­புல்­லாஹ்­வுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் தனி­யி­ட­முண்டு. பேரா­சி­ரியர் ஹஸ்­புல்­லாஹ்வை பொறுத்­த­வரை வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்­களின் இன ஒற்­று­மைக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்தே தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளமை அவர் பற்­றிய ஆய்வில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.


இலங்கை அர­சி­யலில் இனத்­துவ பிணக்கு மற்றும் அதற்­கான தீர்வு முயற்­சிகள் போன்­ற­வற்றில் தான் சார்ந்­தி­ருந்த முஸ்லிம் சமூகம் குறித்தும் பொது­வாக இலங்­கையின் அனைத்து சமூகம் சார்­பா­கவும் தனது புல­மைசார் பங்­க­ளிப்­பு­களை நீண்ட கால­மாக கொண்­டி­ருந்தார்.


20.02-.2006 காலப் பகு­தி­களில் இலங்கை அர­சுக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பல சுற்று சமா­தானப் பேச்சு வார்த்­தை­களில் புல­மைசார் அவ­தா­னிப்­பா­ள­ராக பங்கு பற்­றினார்.


பேரா­சி­ரியர் அவர்கள் இலங்கை முஸ்­லிம்­களின் பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து பல்­வேறு அறிக்­கை­களை உள்­நாட்டு அர­சாங்கம் மற்றும் வெளி­யு­லக சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளிலும் அவ்­வப்­போது சமர்ப்­பித்­தது மட்­டு­மன்றி, இலங்­கையின் முஸ்லிம் அர­சியல் வாதி­க­ளுக்கும் பல்­வேறு தர­வு­க­ளையும், தீர்வு திட்­டங்­க­ளையும் வழங்­க­கூ­டிய ஆழு­மை­யையும் ஆற்­றல்­க­ளையும் கொண்­டி­ருந்தார். பொது­வாக, எமது கால வர­லாற்றில் எமக்குத் கிடைத்த ஒரு அறிவு, ஆற்றல் கொண்ட யுக புரு­ஷ­ராக பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் திகழ்ந்தார் என்­பதில் இரு­வேறு கருத்து கிடை­யாது.


பேரா­சி­ரி­யரின் பல்­வேறு பங்­க­ளிப்­பு­க­ளையும், சமூ­கத்­துக்கு செய்த வர­லாற்று பதி­வு­க­ளையும் ஆய்வு ரீதி­யாக விளக்கி எழு­தப்­பட்ட பேரா­சி­ரி­யர்கள், துறைசார் நிபு­ணர்கள், பேரா­சி­ரி­ய­ரோடு இணைந்து செயல்­பட்ட செயல்­பாட்­டா­ளர்கள் என பதி­னான்கு பேரின் ஆங்­கில, தமிழ் மொழி கட்­டு­ரை­களை தாங்கி எழு­தப்­பட்ட “பேரா­சி­ரியர் எஸ். எச். ஹஸ்­புல்லாஹ் – வாழ்வும் பணியும்” (Prof. S. H. Hasbullah – Life and Works”) என்னும் நூல் “கிழக்கு முஸ்லிம் கல்­விப்­பே­ரவை” யின் முயற்­சி­யினால் தொகுக்­கப்­பட்டு, எதிர்­வரும் 31ந்தேதி திங்­கள்

­கி­ழமை பி.ப. 3.30 க்கு தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.


பிர­தம அதி­தி­யாக யாழ் பல்­க­லைக்­க­ழக முன்னாள் துணை­வேந்­தரும், வாழ்நாள் பேரா­சி­ரி­ய­ரு­மான பொ. பால­சுந்­த­ரம்­பிள்ளை அவர்­களும், சிறப்பு அதி­தி­யாக தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் பேரா­சி­ரியர் றமீஸ் அபூ­பக்கர் அவர்­களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.- Vidivelli



பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்,

தலைவர், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை.

No comments

Powered by Blogger.