Header Ads



கொழும்பின் மேயர் யார்..?


கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. மேயர் பிரதிமேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. NPP சார்பில் 48 உறுப்பினர்களும், SJB 29 உறுப்பினர்களும், UNP 13 உறுப்பினர்களும், SLPP 5 உறுப்பினர்களும் தெரிவாகினர். 


மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர். 


இதுதவிர, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர். 


எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும்.


அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர்.

No comments

Powered by Blogger.