Header Ads



மர்ஹும் கலைவாதி கலீல், கலாபூஷணம் அஸீமுடன் செய்த இறுதி நேர்காணல்


எமது படைப்புக்கள் ஒரு விதை போல வாசகனின் நெஞ்சத்தில் விழ வேண்டும்.


கடந்த நான்கு தசாப்தங்களாக கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவரும், பல்வேறு விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தக்காரருமான கலாபூஷண யாழ் அஸீம் யாழ் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் கவியரங்குகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 


தங்கள் பூர்வீகம் பற்றிக் கூற முடியுமா? 


கல்வியின் விளை நிலமாம் யாழ் மண்ணில் சோனக தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட நான், ஆறு சகோதரிகளையும், மூன்று சகோதரர்களையும் கொண்ட குடும்பத்தில் மூத்த சகோதரனாகப் பிறந்தேன். யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கல்வி கற்ற நான் 1973 ம் ஆண்டு ஆசிரியத் தொழிலில் இணைந்து கொண்டேன். வவுனியா சாளம்பைகுளம் அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்ற நான் இறுதியாக யாழ் ஸ்ரான்லி கல்லூரியில் (கனகரத்தினம் ம. வி. ) கற்பித்து வந்தேன். 1990 ம் ஆண்டு வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இடம் பெயர்ந்து கடந்த பல வருடங்களாக கொழும்பில் வசித்து வருகிறேன். 


அறிஞர்களும், புலவர்களும் வரகவிகளும், கல்விமான்களும், பேராசிரியர்களும் தோன்றியுள்ள யாழ் மாவட்டத்தின் முஸ்லிம் சான்றோர்களின் பங்களிப்புகளைச் சுருக்கமாகக் கூற முடியுமா? 


யாழ்ப்பான முஸ்லிம்கள் கல்வி, இலக்கியம், நிர்வாகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியது மட்டுமன்றி, அத்துறைகளில் அகில இலங்கை ரீதியாக முதன் முதல் நியமனம் பெற்றவர்களாக முத்திரை பதித்துள்ளனர். 


துருக்கித் தொப்பியணிந்து நீதிமன்றம் வர முடியாது எனத் தடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராகப் போராடி எமது சமூகத்தின் மரபுரிமையைக் காத்த திரு எம். சீ. அப்துல் காதர் யாழ் மண்ணைப் பிறப்படமாகக் கொண்டவாராவார். 


இலங்கையின் முதல் முஸ்லிம் நியாயவாதி எம். சீ. அப்துல் காதர் அவர்களாவார். (1904) 


இலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி எம். சீ. அப்துல் காதர் அவர்களாவார். 


இலங்கையின் சிவில் சேவைக்கு (ஊஊளு) தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களாவார். 


இலங்கையின் முதல் முஸ்லிம் வைத்தியர் (ஆடீடீளு) னுச. ஆ. ர். அப்துல் காதர் ஆவார். 


இலங்கையில் முதல் முஸ்லிம் மேன்முறையீட்டு நீதியரசர் எம். எம். அப்துல் காதர் அவர்களாவார். 


இலங்கையின் முதல் முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஏ. எஸ். அப்துல் காதர் (ஸாஹிராவின் முதல் தலைமை ஆசிரியர்) 


இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் வைத்தியர் (ஆடீடீளு) முஹம்மது லெப்பை மைமூன் 


இலங்கையின் முதல் முஸ்லிம் விமானி (Pடைழவ) முஹம்மது லெப்பை அமானுல்லா 


இலங்கையின் முதல் முஸ்லிம் தபால் அதிபர் முஹம்மது ராஜா 


முஹிய்யதீன் புராணம் தந்த பத்றுதீன் புலவர், அசனார் லெப்பைப் புலவர், ஆகியோரும் யாழ் மண்ணின் மைந்தர்களாவர். 


நவீன நாவல் இலக்கியத்தின் முன்னோடி என்று கருதப்படும் இளங்கீரன் சுபைருக்குப் பின்னால் யாழ்ப்பாணத்தில் நாவல் இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா? 


இளங்கீரனுக்குப் பின் நாவல் இலக்கத்தில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்களாக ஓரிருவரைத்தான் குறிப்பிடலாம். முன்னாள் பட்டதாரி ஆசிரியரான முஹிதீன் ராஜா பல நாவல்களை எழுதியுள்ளார். 


யாழ் முஸ்லிம்களின் சோனகதெருவைப் பின்புலமாகக் கொண்டு இவர் எழுதிய நேற்றைய சுகந்தம் நாவல் இலக்கிய உலகில் விதந்து பேசப்ப்டது. காளைவிடு தூது, காவிரியின் செல்வன், ராhஜகிளி முதலிய சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய 'உலகைச் சுற்றும் சிறுவன்' என்ற நாவல் நூலக அபிவிருத்திச் சபையால் தெரிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டது. 


அத்துடன் இலங்கை வங்கியின் முன்னாள் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய முஹிதீன் பிச்சை ஜெலீல் ஒரு 'வெள்ளைப்பூ சிரிக்கிறது' என்னும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவலுக்கு சாகித்திய மண்டலப்பரிசு கிடைத்தது. 


ஒரு கணித, விஞ்ஞான ஆசிரியராகிய நீங்கள் கலையுடன் தொடர்புடைய இலக்கியச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதற்கான காரணம் யாது? 


என் தந்தை ஏ. பி. எம். அப்துல் காதர் அவர்களும் ஓர் எழுத்தாளர்தான். தேசிய பத்திரிகைகளில் அவரது ஆக்கங்கள் வெளியிடப்படாவிட்டாலும் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தன. தந்தையின் வழிகாட்டலும் பயிற்சியும் என்னுள் தமிழார்வத்தை ஏற்படுத்தியது. அத்துடன் நாவல் இலக்கிய முன்னோடி இளங்கீரன், அவர்கள் எங்கள் உறவினரும் நண்பரும் ஆவார். அவரும் என்னுடைய கட்டுரைகள், கவிதைகளைத் திருத்தி நெறிப்படுத்துவார். இளவயதில் இவர்களது தொடர்பும், வழிகாட்டலும் என் இலக்கியச் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைந்தன என்றால் மிகையல்ல. 


கட்டுரை, கவிதை, சிறுகதை விமர்சனம் போன்றவற்றை எழுதி வருகிறீர்கள்! இவற்றுள் எத்துறையில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றீர்கள்? 


தற்கால அவசர உலகில் நாம் வாசகனுக்குச் சொல்ல வேண்டிய விடயத்தை இலகுவில் சொல்வதற்கு கவிதைகளே சிறந்த சாதனமாகும். அதிலும் புதுக்கவிதைகள் மூலம் சமூகத்துக்கு எதைச் சொல்ல விரும்புகிறோமோ அதனை நெற்றிப்பொட்டில் அடித்தது போல் நான்கு வாக்கியங்களில் சொல்லிவிட முடியும். இந்தச் சலுகையை புதுக்கவிதைகள் நமக்கு வழங்கியிருக்கின்றன. எனவே கவிதைகளையே கூடுதலாக நாம் பயன்படுத்துகிறோம். 


இலங்கை வானொலி நிலையம் நடாத்திய போட்டியொன்றில் விமர்சனத்துக்காக தமிழ் சேவையில் முதல் பரிசு பெற்றீர்கள். இவ்விமர்சனத்தை எழுதத் தூண்டிய காரணிகள் எவை? 


1994 ம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ் சேவையில் வாரம் ஒரு வலம் என்னும் நேரடியாக தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அக்கால கட்டத்தில் தான் நேரடியாக தொலைபேசியூடாக உரையாடும் நிகழ்ச்சிகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தன. எழில்வேந்தன் அவர்கள் இந் நிகழ்ச்சியை கவர்ச்சிகரமாகக் கொண்டு சென்றார். நானும் கூட பல தடவைகள் தொலைபேசியூடாக பங்குபற்றினேன். இந் நிகழ்ச்சியை நான் மிகவும் ரசித்து விமர்சனம் செய்து எழுதி அனுப்பினேன். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவிடமிருந்து தமிழ் சேவையில் முதலாம் பரிசைப் பெற்றுக் கொண்டேன். சுhன்றிதழுடன் சுயனழை (வானொலி) ஒன்றும் பரிசாகக் கிடைத்தது. அந்த சுயனழை கால் நூற்றாண்டு கடந்தும் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறது. 


தங்களுக்கு இலக்கிய குருநாதர் என்று எவராவது உள்ளாரா? அல்லது எவராவது சுழடட ஆழனநட இருக்கின்றீர்களா? 


என்னுடைய குருநாதர் என்று எவரும் இல்லாவிட்டாலும் மூத்த புகழ்பெற்ற தரமான கவிஞர்களிடமிருந்து அவர்களின் படைப்புகளிலிருந்து கற்றுக் கொள்கிறேன். உதாரணமாக மு. மேத்தா, இனிய, எளிய இறுக்கமற்ற மென்மையான கவிதைகளைத் தருவதில் புகழ் பெற்றவர். மிக அதிகமான வரவேற்பைப் பெற்றதும், பல பதிப்புகளைக் கண்டதும் 'கண்ணீர்ப்பூக்கள்' தொகுதியாகும். அதிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிடலாம் 


'என் இதயத் தோட்டத்தில் 

ரோஜாவைப் பயிரிட்டேன் 

அறுவடை செய்ய 

உன்னை அழைத்தேன் 

அரிவாளோடு 

நீ வந்த பிறகுதான் 

என் தவறு எனக்குப் புரிந்தது' 


இனிய மென்மையான கவிதைகள் புனைவதை மேத்தாவிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நயம், வர்ணனை, குறியீடு, படிமம், ஆகியவற்றைக் கலந்து பாடும் திறன் கொண்டவர். இவரது பால்வீதி கவிதைத் தொகுதியில் தேர்தலைப் பற்றிய கவிதையிது. 


புறத்தினைச் சுயம் வர மண்டபத்தில் 

போலி நளன்களின் கூட்டம் 

கையில் மாலையுடன் 

குருட்டுத் தமயந்தி' 


புடிமம், குறியீடு, வர்ணனை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை அப்துல் ரகுமானிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். 


எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்? தங்கள் நூல் வெளியீட்டிற்கான வலுவான நோக்கங்கள் பற்றிக் கூற முடியுமா? 


இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. உண்மையில் இலக்கியத்தின் பாடுபொருளாக அமைவது வாழ்க்கையே எழுத்தாளனுடைய வாழ்க்கை அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்கும் கலைப் படைப்பே இலக்கியம். 1990 ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் வாழ்வியலை, வலிகளை ஒரு அகதியின் வாக்கு மூலமாகவே வெளியிட்டுள்ளேன். 


2012 ம் ஆண்டு 'மண்ணில் வேரோடிய மணசோடு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலில் கற்பனைகளில்லை. வர்ணனைகளில்லை. ரணமாகிப் போன இதயத்தின் நிஜமான வலிகள். பூர்வீக மண்ணில் சிறகடித்துப் பறந்த கணங்களும், சிறகொடிந்து வீழ்ந்த கணங்களுமாய் குமிழிடும் நினைவுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளேன். 


எங்கள் வலிகளைக் கூறும் அதே வேளை, எங்கள் உயிரினுமினிய தமிழ் நண்பர்களின் பிரிவுத் துயரைப் பேசும் கவி வரிகளும் இத்தொகுதியில் கைகோர்த்துச் செல்கின்றன. இக்கவிதை நூலுக்கு 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதை நூல்களில் மிகச் சிறப்பான கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருதும் கிடைத்தது. 


மேலும் இவை தவிர துஆசுழு அமைப்பால் வெளியிடப்பட்ட 'யாழ் முஸ்லிம்களின் வரலாற்றுப்பார்வை' என்னும் வரலாற்று நூலின் நூலாக்கக் குழுவிலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2017 ம் ஆண்டு மீலாத் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'யாழ் முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வியலும்' என்னும் நூலின் நூலாக்கக் குழுவிலும் இடம் பெற்றுள்ளேன். 


பேற்ற பட்டங்கள், விருதுகள், பரிசுகள் இலக்கிய சாதனைகள் எவை? 


விருதுகளினால் படைப்பாளி தங்கள் கலைப்பயணத்தில் வளர்வதில்லை. ஆனாலும் விருதுகள் ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரமாகும். ஒரு படைப்பாளியை விருதுகள் ஊக்கப்படுத்துகின்றன எனலாம். எனக்குக் கிடைத்த முக்கியமான விருதுகளை மட்டும் குறிப்பிடுகின்றேன். 


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் 1994 ம் ஆண்டு நடாத்தப்பட்ட விமர்சன விருது விழாவில் தமிழ்ச்சேவையில் முதலாம் இடத்துக்கான விருது. 


2006 ம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்பட்ட வடபுலச் சான்றோர் விருது. 


2007 இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி 'கவிச்சுடர்' பட்டமளித்துக் கௌரவித்தது. 


2008 இல் கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட கலாபூஷணம் விருது. 


2008 இல் அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் வழங்கப்பட்ட சாம ஸ்ரீ தேசகீர்த்தி விருது 


2008 ம் ஆண்டு தடாகம் கலை இலக்கிய வட்டத்தால் வழங்கப்பட்ட 'அகஸ்தியர் விருது' 


2010 ம் ஆண்டு வடமாகாண கல்வி, விளையாட்டு கலாசார அமைச்சால் வழங்கப்பட்ட 'ஆளுனர் விருது' 


2012 இல் 'சமஸ்த லங்கா கவிஞர்கள் சம்மேளனத்தால்' வழங்கப்பட்ட 'காவ்ய ஸ்ரீ விருது' 


2016 இல் உலக இஸ்லாமிய இலக்கிய பொன்விழா மாநாட்டில் இலக்கியப் பணிக்கான விருது 


2019 இல் மேல் மாகாண கலை இலக்கிய சம்மேளனத்தால் வழங்கப்பட்ட இலக்கியப் பணிக்கான விருது 


2021 ஞானம் சஞ்சிகையால் நடாத்தப்பட்ட மாபெரும் இலக்கியப் போட்டியில் சிறந்த கவிதை நூலுக்கான இரண்டாம் பரிசு


அடியேன் உங்களுக்கு ஒரு விழாவின் போது வழங்கிய உணர்ச்சிக் கவிஞர் என்ற பட்டத்தை அங்கீகரிக்கின்றீர்களா? 


வட மாகாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த வேளையில் எனக்கு ஆலோசனைகளும் உதவியும் செய்ததுடன் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகத்தை ஏற்படுத்தி என் வளர்ச்சிக்கு உரமிட்டவர் நீங்கள் வடபுல முஸ்லிம்களின் வலிகளைக் கூறும் போது அதன் பாதிப்பால் உணர்வுபூர்வமாக படிப்பதால், தாங்கள் அழித்த உணர்ச்சிக் கவிஞர் பட்டத்தை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆற்றல்மிக்க, பன்முக ஆளுமை கொண்ட தங்களது பட்டத்தை ஓர் அரச விருதுக்கு சமமாக மதிக்கின்றேன். 


அரச ஆசிரியராக நியமனம் பெற்ற நீங்கள் தற்போது புகழ்பெற்ற தனியார் பாடசாலையான ஸாஹிராக் கல்லூரியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறீர்கள். அக்கல்லூரியில் உங்கள் கலை இலக்கியச் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன? 


ஸாஹிராவின் பொற்காலத்தின் சிற்பியெனக் கூறப்படும் அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களின் காலத்தில் ஸாஹிராவின் தமிழ்ப்பணி பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. தற்போது மாணவர் மன்றம், இக்பால் சங்கம் என்பவற்றைச் செயற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றோம். தமிழ் அமுதம் எனும் கல்லூரியின் சஞ்சிகையை வெளியிடுவதிலும், கவியரங்குகள், தமிழ் தின விழாக்கள் மூலம் ஏனைய தமிழ்ப்பாட ஆசிரியர்களுடன் இணைந்து செயற்பாட்டு வருகின்றேன். மற்றும் நாடகம், விவாதப் போட்டிகள், கிராமிய நடனம் வில்லுப்பாட்டு போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றோம். 


இன்னும் சில நூலகள் வெளிக் கொணரும் எண்ணம் உண்டா? எப்;போது? 


இன்னும் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிடுவதற்கான கவிதைகள் உள்ளன. மற்றும் தினகரன் 'ஆலமுல் இஸ்லாம்,' வீரகேசரி 'பிறைப்பூக்கள்' பகுதியில் வெளியான நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் கட்டுரைகளும் உள்ளன. தற்போதைய அச்சிடும் செலவுகள் காரணமாக உடனடியாக வெளியிட முடியாவிட்டாலும் இவ்வருட இறுதிக்குள் வெளியிட முயற்சிக்கிறேன். 


வானொலி மேடைக் கவியரங்குகளில் அண்மையில் பங்குபற்றி வருகிறீர்கள்' இக் கவியரங்குகள் வெற்றி பெறுவதற்கான காரணிகள் பற்றிக் கூறமுடியுமா? 


கவியரங்குகளை நடாத்துவதற்குரிய ஆளுமை, கவியரங்கிள் தலையங்கம் பற்றிய விடயத்தில் ஆழமான அறிவு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சமாளிக்கும் சமயோசிதம், என்பவற்றோடு தலைக்கனம் இல்லாமல் இருப்பது மிக முக்கியம். பங்குபற்றும் ஏனைய கவிஞர்களுக்கு உற்சாகமளித்து, தன்னம்பிக்கையூட்டி, செயற்படும் போது கவியரங்கம் சிறப்பானதாகவும் தரமானதாகவும் அமையும். 


யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் நீங்கள் எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதி வந்தீர்கள்? அவை தற்போது உள்ளனவா? 


யாழ்ப்பாணத்தில் ஈழநாடு ஈழமுரசு, உதயன் பத்திரிகைகளில் எழுதி வந்தேன். அக்கால கட்டத்தில் தேசிய பத்திரிகைகளில் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்புகள் கிடைக்கவில்லை. அனேகமான யாழ் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவருகின்றன. 


மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள் எழுதி தயாரித்து நடித்த அனுபவங்கள் உண்டா? அதுபற்றிக் கூற முடியுமா? 


நான் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியின் (கனகரத்தினம் ம. வி.) கற்பித்த வேளையில் அக்கல்லூரியில் தமிழ் மன்றத்துக்குப் பொறுப்பாக நானும் பண்டிதை திருமதி அருளானந்தம் அவர்களும், இருந்தோம். அவ்வேளையில் மாணவர்களுக்கான நாடகங்கள் எழுதி நடிக்க வைத்துள்ளோம். அவ்வேளை அங்கு கற்பித்த அரசகுலசூரியர் ஆசிரியருடன் இணைந்து சொக்கனின் 'மாருதப்புரவல்லி' நாடகத்தை தயாரித்து பாடசாலையில் மேடையேற்றினோம். தற்போது கடமையாற்றும் கெர்ழும்பு ஸாஹிரக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான நாடகப் போட்டியில் தமிழ்ப்பிரிவு ஆசிரியர்கள் பங்குபற்றிய 'சிறிசுகளும் பெரிசுகளும்' நாடகத்தில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டோம். 


வகவம் பௌர்ணமிக் கவியரங்குகளில் அடிக்கடி பங்குபற்றி வருகிறீர்கள். வகவம் பற்றிய தங்கள் கருத்து யாது? 


வளரும் கவிஞர்களுக்கு வகவத்தின் மேடை ஒரு பயிலரங்கு... அவர்களது திறமையை வளர்ப்பதற்கான பயிற்சியாக வகவ மேடைகள் அமைகின்றன. மூத்த கவிஞர்களுக்கு அவர்களை மெருகூட்டும் அரங்காக அமைகின்றது. ஒரு நல்லாசிரியன் எவ்வாறு புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றானோ அவ்வாறு ஒரு நல்ல கவிஞனும் தன்னில் திறமைகளையும் நுட்பங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பான். அவ் வகையில் மூத்த கவிஞர்களுக்கு மெருகூட்டும் அரங்காக அமைகிறது. 


இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தாங்கள் கூற விழைவது என்ன?


இன்றைய தலைமுறையினர் நிறைய எழுதுகின்றனர். நான்கு கவிதைளை முகநூலிலும் வட்சப்பிலும் எழுதி விட்டு உடனடியாகவே ஒரு நூலை வெளியிட்டு விடுகின்றனர். தேடல் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். தரமான இலக்கியங்களை வாசிக்க வேண்டும். மூத்த எழுத்தாளர்களின் அறிவுரைகள் விமர்சனங்களை மதித்து தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நமது படைப்புக்கள் ஒரு விதை போல வாசகனின் நெஞ்சத்தில் வீழ வேண்டும். வெறும் பதராக விழக் கூடாது. ஒரு இலக்கை அடைவதற்காக எழுதப்பட வேண்டும். மேத்தா வினவுகிறார்; 


'இந்த பூமி உருண்டையை 

புரட்டி விடக் கூடிய 

நெம்புகோல் கவிதையை 

யார் - தரப் போகின்றீர்கள்' 


நமது கவிதைகள் நெம்பு கோல் கவிதைகளாக இல்லாவிட்டாலும், கண் தெரியாதவருக்கு வழிகாட்டும் கைத்தடியாகவாவது இருக்க வேண்டும். 


No comments

Powered by Blogger.