Header Ads



இலங்கையர்களின் ஆயுட்காலம் பற்றி வெளியான கவலைமிகு தகவல்


இலங்கையில் சிசு மரண வீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி, சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு அடுத்தபடியான சாம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகள் உள்ளன.


இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.


இந்நிலைமைக்கு அந்நாடுகளின் அதிக கடன் சுமையே பிரதான காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அத்துடன், இலங்கை, சாம்பியா, கானா ஆகிய நாடுகள் சீனாவிடம் கடன் பெற்றுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகளில் சீனா உரிய முறையில் தலையிடவில்லை என பெரும்பாலான மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்துவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Oruvan

No comments

Powered by Blogger.