கோடிக்கணக்கு ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன
நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தில் உள்ள, பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யத் தடைசெய்யப்பட்ட, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட, 21 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 04 கஞ்சா செடிகளுடன், இந்த விலங்கு பண்ணையின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை கட்டுப்பாட்டாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment