Header Ads



இலங்கையிலிருந்து அனுப்பும் போது, இரத்தின கற்கள் மாயமாவது ஏன்..?


கடந்த மூன்று மாதங்களில் இலங்கை வான்வழி தபால் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இரத்தின கற்கள் சுமார் பத்து தடவைகள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் இது தொடர்பில் பொலிஸ், தபால் திணைக்களம் மற்றும் விமான நிலையம் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.


கடந்த மூன்று மாதங்களில் விமான நிலையத்தினூடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இரத்தினக்கற்கள் பொதிகள் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும், அந்த பொதிகளில் இருந்த கற்கள் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இந்த மோசடியானது சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், காணாமல் போன சில இரத்தினக் கற்களின் பெறுமதி மிகவும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இலங்கை இரத்தினக்கற்கள் வர்த்தகர்களினால் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இரத்தினக்கற்கள் உட்பட சுமார் 200 பொதிகள் இலங்கை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


காணாமல் போன இந்த மாணிக்கக் கற்களின் பெறுமதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவை அதிக பெறுமதியானது என கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல் போனதாக முறைப்பாடுகள் வந்த இரத்தினக் கற்கள் அமெரிக்கா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.