Header Ads



வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் மரணம்


கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அதுருகிரிய போர சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கும் கெப் வண்டியுடன் மோதியதில் விபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.


சசினி யசோதா கிருஷ்ணரத்ன என்ற 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் போது விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஹோமாகம, ஹபரகட, போதிராஜா மாவத்தையில் வசிக்கும் சசினி யசோதா, தனியார் வங்கி ஒன்றில் தொலைபேசி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றார்.


3 வருடங்களுக்கு முன்னர் சசினி வாங்கிய மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.


வீட்டில் இருந்து மாலம்பே நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​கோவின்ன மாவத்தையில் இருந்து அத்துரிகிரிய போர சந்திக்கு அருகில் பிரதான வீதிக்கு சென்று கொண்டிருந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.