Header Ads



"அருள்வளம் (பரக்கத்) என்பது உங்களின் பெரியவர்களிடம் இருக்கிறது"

 



முதியவர்களிடம் நீங்கள் காட்டும் மரியாதைகளில் ஒன்று, அவர்கள்    தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை சொல்லும்போது அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதைப் போல் கேளுங்கள்.

தவறான தகவலாக இருந்தாலும், சரி செய்ய முயலாதீர்கள்.


உங்களுக்குத் தெரிவிக்க தங்களிடம், சில விஷயங்கள் இருக்கின்றன என அவர்கள் திருப்தி அடையவிட்டு விடுங்கள்.


நீங்கள் அவர்களுடன் செலவிடும் நேரத்தில், நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்,


அவர்களின் பழைய சம்பவங்கள் மற்றும் நினைவுகளைப் பற்றி அவர்களிடம் கேட்டு அவர்களின் நினைவாற்றலைத் தூண்டுங்கள் ,


 அவர்களுடன் அமர்வது ஒரு கடினமான கடமை எனக் கருதாமல் நீங்கள் ஆர்வமாக இருக்கும் பொன்னான நேரம் என்று அவர்களை உணரச்செய்யுங்கள்.


அருள்வளம் (பரக்கத்) என்பது உங்களின் பெரியவர்களிடம் இருக்கிறது"


(இப்னுஹிப்பான்.559)


என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையை நினைவில் கொள்ளுங்கள்.

-அரபு இணையத்திலிருந்து-


இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி

No comments

Powered by Blogger.